வளர்ச்சிதான் முக்கியம் இலவசங்கள் அல்ல: அமமுக வேட்பாளர்

இலவச திட்டங்கள் இல்லாத, மக்கள் பயன்பெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமே அமமுக வின் லட்சியம்: மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை பேட்டி.;

Update: 2021-03-14 14:30 GMT

மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு ஆளுமை மிக்க ஒரு தலைமைதான் இப்போது தேவை. இந்த பொதுத் தேர்தலின் மூலமாக தமிழ்நாடு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் நல்ல ஆளுமை மிக்க ஒரு தலைமையின் கீழ் இந்த தமிழ்நாடு வீறுநடை போட வேண்டும்.

நேற்றைய தினம் டிடிவி தினகரன், ஒரு அற்புதமான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கி இருக்கிறார்கள்.

மற்றவர்களைப் போல கவர்ச்சிகரமான திட்டங்களை இலவசங்களையும் நாங்கள் மையப்படுத்தாமல், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது வேலை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா பொருளாதாரப் புரட்சி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை டிடிவி அறிவித்துள்ளார்.

வெறும் இலவசங்கள் மட்டும் போதாது, ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்களாக பொருளை சேர்க்கக் கூடிய வகையிலே அவர்களை உயர்த்துவது தான் ஒரு அரசாங்கத்தினுடைய லட்சியமாக இருக்க வேண்டும். இலக்காக இருக்க வேண்டும். இந்த தமிழ்நாட்டிலே அதை செய்யக் கூடிய தகுதி படைத்த தலைவர் டிடிவி அவர்கள் தான்.

அவருடைய வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக நான் களம் காண்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய தலைவன் யார் என்று பார்க்கிறார்கள்.

அப்படிப்பட்ட தேர்தலில் ஆளுமை மிக்க தலைவராக நம்பத்தகுந்த தலைவராக இன்னும் சொல்லப்போனால் டிடிவியை தேர்ந்தெடுத்து, அவர் அறிவிக்கக்கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால்தான் தமிழ்நாடு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும், என்ற நிலைமை இருக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான வசதி செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக மாநகராட்சியுடன் இணைந்து இருக்கக்கூடிய பகுதிகளுக்கு அடிப்படை தேவைகள் என்பது கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் ஆகியும் இன்னும் நிவர்த்தி, செய்யப்படவில்லை.

ஆழ்குழாய், பாதாள சாக்கடை திட்டம் என்பது இல்லவே இல்லை. ஆக இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டிய ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக நாங்கள் டிடிவியின் வேட்பாளராக வெற்றி பெற்று, டிடிவி முதலமைச்சராக ஆவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிப்பார் ஆனால் அதிமுகவில் பழையவர்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளார்கள்?

உன்மைதான் ஆனால், 2011, 2016. புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதே போல் டிடிவி அவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்புகளை தருவார்கள் என்பது உண்மைதான். டிடிவி, புரட்சித்தலைவி அம்மா வடிவமாகத் தான் இன்றைக்கும் எங்களை போன்ற புதியவர்களுக்கு கட்சிக்காக உழைக்கின்ற விரலுக்கும் வாய்ப்புகளை கொடுக்கின்றார்கள் அதனால்தான் இதை நாங்கள் சொல்கிறோம்.

அண்ணா திமுகவை மீட்டெடுக்க கூடிய தேர்தல், இந்த தேர்தல். வெற்றியின் மூலமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்மாணித்து இருந்தார்களோ. அதேபோல, அண்ணா திமுகவை மீட்டெடுப்பதற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும்.

அம்மா நிரப்பிய அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை நிச்சயமாக அந்த இடத்தை அம்மாவைப் போலவே செயல்படக்கூடிய ஒரு தலைவர் அண்ணன் டிடிவி, நிச்சயமாக அம்மாவின் கனவுகளையும், அவர் கொண்ட லட்சியங்களை நிச்சயமாக செயல்படுத்துவார் என்று கூறினார்.

Tags:    

Similar News