மதுரையில் பெருகி வரும் மனிதநேயம்
கொரானா காலத்திலும் மனிதநேயத்துடன் சாலைகளில் சுற்றிதிரியும் நாய் மாடு உட்பட விலங்குகளுக்கு உணவளித்துவரும் மதுரை வாழ் ராஜஸ்தானி.
உலகையே துயரத்துக்குள்ளாக்கிய கொரானா வைரஸ் பொருளாதார ரீதியிலும் உடல் மனதளவிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் , கொரானா 2-வது அலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரானா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மனிதர்கள் உட்பட சாலைகளில் ஆதரவற்று சுற்றிதிரியும் நாய் மாடு உள்ளிட்ட விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றன.
அந்தவகையில் மனிதர்கள் கஷ்டப்படுகிற இந்த நேரத்திலும் மனிதநேயத்துடன் விளையாட்டு சாதனங்கள் விற்பனை செய்துவரும் மதுரையில் வாழும் ராஜஸ்தானை சேர்ந்த பெருகுமார் ஜெயின் என்பவர் தினமும் பால் வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை, தினசரி மதுரையில் வழங்கிவருகிறார்.
கொரானா முதலாவது அலை ஏற்பட்ட தாக்கத்திலிருந்து இன்றுவரை விலங்குகளுக்கு உணவளித்துவரும் இவரின் மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.