பெட்ரோல்,டீசல் விலை உயர்வு என்பது சர்வதேச பிரச்சனை-ஜிகே வாசன்

இலங்கையில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் தேவைக்கேற்ப முதலில் உதவி செய்தது இந்திய அரசு தான்.-த.மா.க. தலைவர் ஜிகே வாசன்;

Update: 2022-04-02 06:33 GMT

இலங்கையில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் தேவைக்கேற்ப முதலில் உதவி செய்தது இந்திய அரசு தான்.-த.மா.க. தலைவர் ஜிகே வாசன் பேட்டி

திருப்புவனம் செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு:

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதனுடைய தாக்கம் போரின் அடைப்படையில் என்றாலும் கூட பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. வருகின்ற நாட்களில் இது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். விலை உயர்வு என்பது சர்வதேச பிரச்சனை. இது போரின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மத்திய அரசு செயல்பாடு குறித்த கேள்விக்கு:

மத்திய அரசைப் பொருத்தவரை மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் தமிழக மக்களின் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இலங்கையின் தற்போதைய நிலையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து கேள்வி:

இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுக்கு தேவைக்கேற்ப முதலில் உதவி செய்தது இந்திய அரசாக தான் இருக்க முடியும் என்று குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு:

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, பல நேரங்களில் இது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய உறுதியான நிலையை மத்திய வெளியுறவுத்துறை எடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் உறுதியோடு பேசி அவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று தங்களின் வாழ்வாதாரம் தொடர மத்திய அரசு துணை நிற்க வேண்டும். அத்தகைய பணியை மத்திய அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என G.K. வாசன் கூறினார்.

Similar News