தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள்

நிலையூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாடப் புத்தகங்களை வழங்கினார்.;

Update: 2021-06-29 05:11 GMT

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

நிலையூர் அரசு உயர்நிலை பள்ளியில்  ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாடப்புத்தகங்களை வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அரசு வழங்கும்   தமிழ் வழி கல்வி மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவ மாணவிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் வே.ம.விநாயகமூர்த்தி கூறும்போது போது, கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிப்பரப்பாகும் நேரம் மற்றும் கால அட்டவணைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் கல்வித் தொலைக்காட்சி பார்க்க அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளி மாணவ மாணவிகள் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தியும் மற்றும் மூக கவசம் அணிந்தும் மாணவர்கள் புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இந்த பள்ளி இண்டர்காம் வசதி, ஆங்கில வழிக்கல்வி போன்றவற்றில் அசத்தி தமிழகத்திலேயே முதன் முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News