இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

Update: 2021-04-20 05:00 GMT

இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளதால், வரும் ஞாயிற்றுக்கிழமை 25ம் தேதி சுப முகூர்த்த நாளாக இருப்பதால் ஏற்கனவே திட்டமிட்ட திருமணம் மற்றும் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்த இயலாத சூழல் இருப்பதோடு, சுபநிகழ்ச்சிகளுக்கு தடங்கல் ஏற்படும் விதமாக உள்ளதால் சுபநிகழ்ச்சி நடத்தும் குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் எனவும், மேலும் அழுகும் பொருட்களான காய்கறிகள், பழங்கள் மொத்த வியாபாரம் மற்றும் சரக்குகள் முழுக்க முழுக்க இரவில் மட்டுமே நடைபெறுவதால் இரவு நேர ஊரடங்கு வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் எனவும், அரசு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து காய்கறி சந்தை வணிகத்தை இரவில் நடத்திக்கொள்ள இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்குமாறு கூறி மதுரை மாவட்ட கலெக்டர் வாயிலாக தமிழக அரசுக்கு மனு ஒன்றினை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பரவை காய்கறி சந்தை நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News