திருப்பரங்குன்றம் தொகுதியில் சி.ஆர்.சரஸ்வதி தீவிர பிரசாரம் செய்தார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேபட்பாளரை ஆதரித்து சி.ஆர்.சரஸ்வதி தீவிர பிரசாரம் செய்தார்.;
திருப்பரங்குன்றம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள பூமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தா£ர் சி.ஆர். சரஸ்வதி, அவருக்கு எம் ஜி ஆர்.மன்ற மாநில இனைச் செயலாளர் ஜோதிராமலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்றார்.சி ஆர் சரஸ்வதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
ஆர்.கே.நகரில் தினகரனை வெற்றி பெறச் செய்தது இங்கு கூடியிருக்கும் பெண்கள்தான் அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இங்கு நிற்கும் பெண்கள் தான் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதிமுக பணத்தை வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் துரோக செயலில் ஈடுபட்டவர் எடப்பாடி பழனிச்சாமி
ராஜன் செல்லப்பா கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் தொகுதியில் எதுவும் செய்யாதவர் எம்.எல் ஏ , மேயராக இருந்தவர் எதுவும் செய்யாதவர் அதனால் இந்த தொகுதியில் பணத்தை கொடுத்து ஜெயித்து விடலாம் என்று உள்ளார் இதற்கு யாரும் இடம் கொடுக்காதீர்கள்
விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா இங்கும் போது வாய் திற்க்காமல் இருந்தவர் இப்போது வாய் கிழிய பேசுகிறார் தற்போது இவரது சொத்து மதிப்பை மக்கள் மன்றத்தில் வைப்பாரா
உதயகுமார் கோவில் கட்டியுள்ளார் இடத்தை வளைத்து போடுவதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலையை, சிறிதாக வைத்துள்ளார் என்றார். இவ்வாறு அவர் பேசினார்.