அரசு உத்தரவை மீறும் ஒப்பந்ததாரர்
புதிய சாலை அமைக்கும் பொழுது பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவை மீறும் ஒப்பந்ததாரர்.. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:;
புதிய தார்சாலை அமைக்கும் பொழுது ஏற்கனவே உள்ள தார் சாலையை பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றி மேலும் உயரம் ஏறாமல் இருப்பதற்கு பழைய சாலையை அகற்ற வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது இதனை தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.
தமிழக அரசு உத்தரவை மீறும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது அதில் தமிழக அரசு விதித்த எந்த விதியையும் அமல்படுத்தாமல் பழைய சாலை மீது புதிய சாலை அமைக்கப்படுகிறது .
இதனால் , சாலையின் உயரம் உயர்ந்து சாலையில் சீக்கிரம் பழுது ஏற்படுகிறது அரசு விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட சாலையை மீண்டும் புதுப்பித்து பழைய சாலை பெயர்த்தெடுத்து பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா? மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை .