டிக்டாக் சூர்யா தேவி ஆண் நண்பருடன் சேர்ந்து செய்த காரியம், அசந்து போன போலீசார்

டிக்டாக் சூர்யா தேவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து சமீபத்தில் செய்த செயலில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-08 12:54 GMT
மதுரை சிக்கந்தரை வீடு தேடி வந்து செருப்பால் அடிக்கும் டிக்டாக் சூர்யா தேவி

மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சிக்கா என்ற சிக்கந்தர் (44). யூடியூபரான இவர், கடந்த 2ம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது டிக்டாக் சூர்யாதேவி, தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்கு வந்தார். தன்னைப்பற்றி தவறாக பேசி வருவதாக கூறி, சிக்கந்தரை செருப்பால் தாக்கியதோடு வீடியோவில் பதிவேற்றி யூடியூப் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக சிக்கந்தர- சூர்யாதேவி இருவரும், ஒருவரையொருவர் மாறி, மாறி சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வந்தனர்.

இது தொடர்பாக சிக்கந்தர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் அளித்த புகார் மனுவில், சூர்யா தேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுக்கிறார் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு சூர்யா தேவி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சூர்யாதேவியு உடன் வந்த ஆண் நண்பர் மீதும் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே சிக்கந்தர் என்ற சிக்காவும், சூர்யாதேவியும் செருப்பால் மாறி, மாறி தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ஆபாச பேச்சுகள், வீடியோக்களை பதிவிடும் இது போன்ற நபர்கள் மீது, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

Tags:    

Similar News