அதிமுக, திமுக தராத வாக்குறுதி என்ன- ராதிகா விளக்கம்

Update: 2021-03-31 04:15 GMT

அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்களும் வழங்காத வாக்குறுதி ஒன்றே ஒன்றுதான். மணப்பெண், மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து, முதலிரவு நடத்தி வைப்பது மட்டும் தான் என ராதிகா குற்றம் சாட்டினார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் ராதிகா மதுரை புதூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர், அப்போது நடிகை ராதிகா பேசியதாவது, ஜெயலலிதா தலைமை இல்லாமல் அதிமுக திண்டாடி கொண்டிருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு எல்லா வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்கள். அவர்கள் கொடுக்காத வாக்குறுதி என்னவென்றால் மணப்பெண், மாப்பிள்ளை தேடித் தருவது மட்டும் தான் கொஞ்சம் விட்டால் முதலிரவு வரை ஏற்பாடு செய்வார்கள்.நாங்கள் வியாபாரிகள் அல்ல. இப்பொழுது அறிவித்துள்ள அறிவிப்புகள் யாராலும் செய்ய முடியாது. அடுத்து ஆட்சிக்கு வருபவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். எனவே நீங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News