சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்
சலூன் கடை திறக்க அனுமதி வேண்டி மதுரையில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக சார்பில் ஆர்ப்பாட்டம்;
தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி சலூன் கடை திறக்க வலியுறுத்தி மதுரையில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மாவட்ட ஆட்சியாளர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் காரணமாக மாநில அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடையை அடைக்க வேண்டும் என்று அறிவித்தது.
தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தொழில் அனுமதி வேண்டும் என்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் கடைகளை திறக்க அனுமதி வேண்டியும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சலூன் கடை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்