எனக்கு ஓட்டு போட்டா, ஒரு ஊசியாவது போடுவேன்: மதுரை வடக்கு பா.ஜ.க.வேட்பாளர்
மதுரை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் டாக்டர் சரவணன் எனக்கு ஓட்டு போட்டால், ஒரு ஊசியாவது போடுவேன், திமுகவிற்கு ஓட்டுபோட்டால், எம்.எல்.ஏவை தேடவேண்டியிருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.;
மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட கல்யாண சுந்தர வீதி, சத்திய முர்த்தி வீதி, மீனாட்சி புரம், பீ.பி. குளம், போன்ற பகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:
நான் இந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவன். இந்த பகுதியில் விளையாடி, இந்த பகுதியில் ஓடி ஆடியவன். இதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறேன்.
10 ஆண்டுகளில் சாதனை புரிந்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது சாதனைகளும், அறிவிப்புகளும் வெற்றியை தேடித் தரும். மதுரை வரும் முதல்வரிடம் மாதத்திற்கு ஒரு சிலிண்டர் கோரிக்கை வைக்க போகிறேன்.
இந்த தொகுதியினை விட்டு நான் எங்கும் செல்ல முடியாது. வெளியூருல இருந்து திமுக. வேட்பாளர் வந்துருக்காரு. உங்க வீடு உங்க கிட்ட இருக்கணும்னா, நீங்க அதிமுகவை ஆதரிக்கும் எனக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வீடு அடுத்தவர்களால் அபகரிக்க வேண்டும் என்றால் திமுகவை ஆதரிங்க.
நான் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. எனக்கு ஆஸ்பத்திரி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் செய்த சாதனைகளை எனது சொந்த தொகுதியான வடக்கு தொகுதியிலும் தொடருவேன்.
எனக்கு ஓட்டு போட்டா, ஒரு ஊசியாவது போடுவேன். வெளியூர் வேட்பாளருக்கு போட்டு விட்டு எம் எல் ஏ.வை காணவில்லை என தேடிக் கொண்டிருக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசினார்.