அதிமுக கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகள்: புதிய நீதி கட்சி

விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமை அறிவிக்கும். - மதுரை விமான நிலையத்தில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி

Update: 2021-02-24 11:45 GMT

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த புதிய நீதிக் கட்சித் தலைவர் AC சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இன்று மாலை செக்கிழுத்த செம்மல், சுதந்தரப் போராட்ட வீரர், அய்யா வ.உ.சி. அவர்களுடைய வெண்கலச் சிலை திறப்பு விழா போடியில் நடைபெற இருக்கிறது. என்னுடைய தலைமையில், துணை முதல்வர் OPS அவர்கள் சிலையைத் திறந்து வைக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னது போல, இந்தியாவில் எந்த மாநிலமும் கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த வில்லை. நாம் 99 சதவீதம் தமிழகத்தில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். பல மாநிலங்களில் கொரோனாத் தாக்கம் 2வது சுற்று தென்பட்டாலும் தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. அதைப் போல பல துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

ஆயிரம் கிராமப்புற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பை எடப்பாடியார் அரசு ஏற்படுத்தி தந்து இருக்கிறது. விவசாயக் கடன் 15 ஆயிரம் கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கி அதிக இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நீதிக் கட்சி அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது. மீண்டும் எடப்படியார் ஆட்சி அமையும். புதிய நீதிக் கட்சி ஆறு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணித் தலைமையிடம் கேட்டு இருக்கிறது என்றார்.

Tags:    

Similar News