மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்து சுமார் 150 பவுன் நகை மற்றும் 6 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
மதுரை பைக்ரா இபி காலனி பகுதியில் முருகன் - காளிஸ்வரி தம்பதி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். முருகன் வாடிப்பட்டி அருகே தனியார் டிராக்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். சம்பவத்தன்று மதியம் முருகனின் மனைவி காளிஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் கலைந்த நிலையில், இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு பீரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்கநகை 6 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
உடனே சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.