நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரையில் செல்பி ஸ்பாட் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அன்பழகன் தொடங்கி வைத்து செய்தியாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார்.