ராஜேஷ்தாசை கைது செய்ய கோரி போராடியவர்கள் கைது

Update: 2021-03-05 10:45 GMT

பெண் காவல்அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உயர்அதிகாரியை கைது செய்யக் கோரி மதுரை மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் எஸ்பிக்கு, கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்ததை அடுத்து, அவர் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக ராஜேஷ்தாசை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும், மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய மாணவ சங்கத்தினர் சார்பில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது, அவர்கள் கைதாக மறுத்ததையடுத்து இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News