தமிழகத்தை விட 60 எம்எல்ஏக்கள் அதிகம் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்ட தேர்தல் என்பதில் பாஜகவின் சூழ்ச்சி தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரையில் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தாெல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.மேற்குவங்க மாநிலத்தில் தமிழ்நாட்டை விட 60 தொகுதிகள் தான் அதிகம். தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல். ஆனால் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை நடத்த இருக்கிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் கூட அறிவிப்புகளாகவே இருக்கிறது .எனவே அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டி இருக்கிறது.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதார பூர்வமாக நம்மால் அறிய முடியும். பாஜக சாதி அடிப்படையில் உணர்வுகளை தூண்டிவிட்டு அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராது. ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாவது அணி உருவாகும் ஆனால் எப்போதுமே இருதுருவ தேர்தல் தான் நடக்கும் என கூறினார்.