ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்- சத்துணவு ஊழியர்கள் கைது

Update: 2021-02-23 10:15 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல் போராட்டம் செய்த சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து சத்துணவு ஊழியர்களையும் முழு நேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இதில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சோலையப்பன், மாவட்டத் தலைவர் செல்வம், குருசாமி, மாவட்ட பொருளாளர் சந்திரபாண்டி உள்பட திரளான ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News