மதுரையின் நினைவுச்சின்னங்கள்- அமைச்சர் திறந்து வைப்பு

Update: 2021-02-20 09:45 GMT

மதுரையின் பெருமையை நினைவு கூறும் நினைவு சின்னங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

பழம்பெரும் மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் முக்கிய ரவுண்டானாக்களில் ஜல்லிக்கட்டு காளையும், மதுரையின் பெருமையான தேர்திருவிழாவை நினைவு கூறும் வகையில் மீனாட்சியம்மன் தேர், பழங்காநத்தம் பகுதியில் பத்து தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது.அதே போன்று உலக நாடுகளில் தற்போது வரவேற்பை பெற்றுள்ள கபடி போட்டியை பெருமை படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலைகளை இன்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சோலைராஜா, பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News