இரட்டை அகல ரயில்பாதை பணி- ரயில் போக்குவரத்து மாற்றம்

Update: 2021-02-20 07:13 GMT

மதுரை- திருநெல்வேலி இடையே இரட்டை அகல ரயில்பாதை பணிக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-கங்கைகொண்டான் மற்றும் கோவில்பட்டி-கடம்பூர் ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பிப். 28ம் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை மதுரை வரை மட்டும் இயக்கப்படுகிறது. சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 24, 25, 26, 28 ஆகிய நாட்களில் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News