ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியின் போது கூறினார்.
மதுரை சோலைஅழகுபுரத்தில் அரசு சார்பில் 644 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 44 லட்சம்மதிப்பிலான தாலிக்கு தங்கம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்ததாக மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு ,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடுகு அளவு கூட ஊழல் நடைபெறவில்லை.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார்.
ஸ்டாலின் தொடர்ந்து உளறுவதை நிறுத்த வேண்டும்.தமிழகத்தில் மருத்துவ வசதிகள் அதிகளவில் உள்ளதால் பன்னாட்டு கடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அதி விரைவில் துவங்க உள்ளது. பிரதமர் துவங்கி வைத்த திட்டம் எப்படி நடைபெறாமல் இருக்கும்?,மதுரை எய்ம்ஸ் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலை தெரிவித்து வருகிறார்கள் என்றார்.