ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 4வது நாளாக தொடர் போராட்டம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் - கைது.
CPS திட்டங்களை ரத்து செய்திட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், 4.5 லட்சம் காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும் , சத்துணவு அங்கன்வாடி, கிராம்புற ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சாலைபணியாளர்களின் நிலுவைதொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 4நாட்களாக போராடிவருகின்றனர். 4வது நாளான இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின்போது பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலையில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலிசார் அவர்களை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.