தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவரான செந்திலுக்கு செலுத்தப்பட்டது. அதே போல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்குமணிக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.