வாடிவாசல் முன் திருமண உறுதியேற்பு, காதலர்கள் மனு

Update: 2021-01-11 11:59 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று வாடிவாசல் முன்பு திருமண உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்த கோரி காதலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் (28), மற்றும் தற்சார்பு வாழ்வியல் பயணி என்ற சமூகஆர்வலர் வித்தியாதரணி (31) ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது பார்வையாளர்களாக பங்கேற்ற போது இருவரும் சந்தித்து பின்னர் நண்பர்களாக பழகி கடந்த 4 ஆண்டுகளாக காதல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரு வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இருவீட்டாரின் சம்மதத்துடன் மணமுடிக்க முடிவு செய்த காதலர்கள், சந்தித்த நாளான அன்றைய தேதியிலேயேயும், குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது வாடிவாசல் முன்பு வைத்து திருமண உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளனர். 

Tags:    

Similar News