உருமாறிய கொரோனா குறித்து அச்சம் வேண்டாம், விஜயபாஸ்கர்

Update: 2021-01-11 05:08 GMT

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியின் போது கூறினார்.

மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழக அரசு கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக பூர்வாங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக 6,00,000 முன்கள பணியாளர்களை அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவித்ததோடு அவர்களுக்கு திட்டமிட்டபடி சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை உறுதி அளித்ததாக கூறினார்.

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சர், கடந்த இரண்டு மாதங்களில் இங்கிலாந்தில் இருந்து வந்த அனைத்து பயணிகளையும் முழுவதுமாக அடையாளப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய அவர், ஏற்கனவே தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்களும் நலமுடன் இருப்பதாகவும், இந்த வைரஸை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தினார்.பறவை காய்ச்சலை பொறுத்தவரை ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்களில் தான் பாதிப்பு உள்ளதாகவும், பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவி விட கூடாது என்பதற்காக, சுகாதாரத்துறையானது கால்நடைத்துறையுடன் இணைந்து செயலாற்றி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Tags:    

Similar News