ரேஷன் கடை டோக்கன் வழங்குவதில் பிரச்சனை இல்லை : அமைச்சர் செல்லூர் ராஜூ

Update: 2020-12-28 09:15 GMT

ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்குவதில் கடுகளவு கூட எந்த இடத்திலும் பிரச்சனை இல்லை,உரிய வழிமுறைகளைப் பின்பற்றிய டோக்கன் வினியோகம் செய்யப்படுவதாக மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியின் போது கூறினார்.

தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரம் உடையார் கண்மாயை தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,இன்னும் முப்பது நாட்களில் மதுரையில் தங்குதடையின்றி கழிவு நீர் கலக்காத சுத்தமான குடிநீர் வழங்கப்படும்,திமுக ஆட்சி காலத்தில் இந்த பகுதியில் ரவுடி தொல்லை அதிகமாக இருந்தது,அதிமுக நடத்தும் கூட்டத்திற்கு வார்டு மெம்பர்கள் மூலம் அவர்களை அழைத்து வருவார்கள், தேர்தலின் போது மக்களைப் பார்க்கும் கட்சி நாங்கள் இல்லை,தேர்தல் என்பதால் தற்போது கிராம சபை கூட்டம் போடுகிறார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும். இதுதான் திமுகவின் கொள்கை,மத்திய அரசிற்கு நாங்கள் இணக்கமாக இருக்கிறோம் திமுக போல் பயந்துகொண்டு இல்லை, திமுக விற்கு செல்வாக்கு உள்ளது என்றால் நேரடியாக சவால் விடுகிறேன்,உதயசூரியன் சின்னத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?, இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது.இழந்த சின்னத்தை மீண்டும் பெற்ற ஒரே கட்சி அதிமுக தான். ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்குவதில் கடுகளவு கூட எந்த இடத்திலும் பிரச்சனை இல்லை,உரிய வழிமுறைகளைப் பின்பற்றிய டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News