ஜல்லிக்கட்டில் கூடுதல் மாடுபிடி வீரர்கள், காளைகள் கலந்து கொள்ள அனுமதி : தமிழக அரசுக்கு கோரிக்கை
திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதல் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை சேர்க்க தமிழக அரசிற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் கிராமத்தில் தைப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவது வழக்கம்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகளை வழிவகுத்துள்ளது. இதில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து உள்ளதால் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போர் ஏமாற்றமடைந்துள்ளனர் .
ஒவ்வொரு ஆண்டும் 700 -க்கும் மேற்பட்ட காளைகளும் 800க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறுவார்கள் .இதில், 50 பேர் கொண்ட குழு ஒரு மணி நேரத்திற்கு ஒரு போட்டியில் களத்தில் நின்று மாடு பிடிப்பார்கள்.தற்போது வகுத்துள்ள விதிமுறைகள் மாடுபிடி வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் கலந்துகொள்வதால் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்னும் அதிகமான அளவு மாடுகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதி தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ,வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாடுபிடி வீரர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இல்லாமல் போகும் என கூறுகின்றனர்.