தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டு அலை புயல் போல் வீசுகிறது என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.
மதுரையில் நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து காெண்டு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு கிளினிக்கை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்,விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன பேசி வருகிறோம் என தெரியாமல் பேசுகிறார், குப்பைக்கு வரி என்பது உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி மத்திய அரசு கொண்டு வந்தது. ஸ்டாலின் மக்களை எமாற்றி எதையாவது செய்து முதல்வர் ஆக நினைக்கிறார்.
நியாய விலைக்கடையில் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை வைக்க முடியவில்லை, மக்கள் கைரேகை வைத்து ரூ. 2,500 பணம் பெறுவதை தவிர்க்க வேண்டுகோள் விடுத்து உள்ளோம், கைரேகை இல்லாமல் பொங்கல் பரிசு பணம் கொடுக்க ஏற்பாடு நடைபெறுகிறது, முதல்வருக்கு யாரும் ஆலோசனை சொல்ல தேவையில்லாத அளவிற்கு செயல்பட்டு வருகிறார், விளம்பரம் தேடும் நோக்கில் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்துகிறார் என்ற அமைச்சர், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாராட்டு அலை புயல் போல் வீசுகிறது என கூறினார்.