எஸ்றா சற்குணம் திமுகவின் ஏஜெண்டாக செயல்பட கூடாது : எல்.முருகன்

Update: 2020-12-24 07:15 GMT

எஸ்றா சற்குணம் திமுகவின் ஏஜெண்டாக செயல்பட கூடாது என மதுரையில் பாஜக தமிழக தலைவர் முருகன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கொரானோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொங்கல் பரிசோடு ரூ.2500 உதவித் தொகை வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி கூறுகிறோம்.எஸ்றா சற்குணம் பாதிரியார் வேலையை மட்டும் செய்ய வேண்டும். திமுகவின் ஏஜெண்ட் ஆக செயல்படக் கூடாது. பிரதமரை ஒருமையில் பேசிய அவரைக் கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்துவோம்.

தமிழக பாஜக சார்பில் விவசாயிகளை சந்தித்து ஆயிரம் இடங்களில் கூட்டம் நடத்தி மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டம் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். திமுக விவசாயிகள் விஷயத்தில் இரட்டை வேடம் போடுவார்கள். அவர்களது ஆட்சியில் துப்பாக்கிச் சூட்டில் 42 விவசாயிகள் இறந்தனர். வருகின்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு வரும். ஆளுநரிடம் திமுக கொடுத்த அதிமுக அரசின் ஊழல் அறிக்கை குறித்து ஆளுநர் பரிசீலிப்பார் என எல். முருகன் பேட்டியின் போது தெரிவித்தார்.

Tags:    

Similar News