அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
அந்தமான் கடற்பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உறுவாகியுள்ளது.;
தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் தாய்லாந்து கடற்கரையில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த தாழ்வு பகுதி மேற்கு - வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுநாள் (15ம் தேதி) நிலைகொள்ள வாய்ப்புள்ளது.
அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திர கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.