தியாகி இமானுவேல் சேகரனாரின் உரிமைக்குரலை ஒலிக்கச் செய்வோம் -தமிழக முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளை போற்றும் விதமாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும், போராளியாகவும், முனைப்புடன் செயலாற்றிய சமூக விடுதலைக்கான தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.