தசரா விழாவை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை அருகே கிராம தேவதைகளின் உற்சவ விழா
கிராம தேவதைகளின் உற்சவ விழாவில் தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மணியம்பாடி கிராமத்தில் ஆண்டு தோறும் தசரா திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தசரா விழா முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.
மணியம்பாடி மெலூர் ஒட்டர்பாளையம் ஆகிய கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்கவும், மக்கள் நொடியின்றி வாழவும் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடத் தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு மணியம்பாடியில் உள்ள கிராம தேவதைகளான பட்டாளம்மன், மாரியம்மன், மெலூர் கிராமத்தில் சிக்கம்மா, தொட்டம்மா, பசுவேஸ்வர சாமி, வீரபத்திர சாமி, பட்டாளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், வெங்கடராம சுவாமி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள திம்மராய சாமி, சென்றாய சாமி, வீரபத்திர சாமி உட்பட பல்வேறு கிராம தேவதைகளை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மேள, தாளங்கள் முழங்க அலங்கரிக்கபட்ட எருதுகளுடன் ஊர்வலமாக தோள்களில் சுமந்தவாறு புறப்பட்ட பக்தர்கள் மணியம்பாடி கிராமத்திற்கு வந்தடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் அனைத்து கிராம தேவதை களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் பாரம்பரிய நடமாடினர். இதைத்தொடர்ந்து மரக்கிளைகள் கொண்டு வந்து அந்த மரங்களின் கிளைகளின் தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர் இந்த விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொன்டனர்.