காவேரிபட்டிணத்தில் செல்போன் பறித்துச் சென்ற இருவர் கைது
காவேரிபட்டிணத்தில் செல்போன் பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன். இவர் கடந்த 12.03.2022 ஆம் தேதி காவேரிப்பட்டிணம் - மலையாண்டள்ளி ரோட்டில் மலையாண்டள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் தருமனின் மேல் பாக்கெட்டில் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர்.
காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் தருமன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் செல்போன் பறித்த இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.