கிருஷ்ணகிரியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது
கிருஷ்ணகிரியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி காவல் நிலைய பகுதியில் ஜெயலட்சுமி கல்யாண மண்டபம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,₹1000 பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.