அடையாளம் தெரியாத பிரேதத்தை நல்லடக்கம் செய்த மனித நேயமிக்க காவலர்
கிருஷ்ணகிரியில் அடையாளம் தெரியாத பிரேதத்தை மனித நேயத்துடன் காவலர் பாஸ்கர் நல்லடக்கம் செய்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இறந்து கிடந்த சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விளம்ரம் கொடுக்கப்பட்டது.
பல நாட்களாகியும் உறவினர்கள் யாரும் வராத நிலையில் கேட்பாரற்று கிடந்த பிரேதத்தை கைப்பற்றி பாகலூர் காவல் நிலைய தலைமை காவலர் பாஸ்கர், கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை பைபாஸில் உள்ள சுடுகாட்டில், இறந்தவரின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்து மரியாதை செலுத்தினார்.