சூளகிரி ஒன்றியத்தில் கிராம சேவை மைய இணையதள வசதிகள் ஆய்வு
சூளகிரி ஒன்றியத்தில் கிராம சேவை மைய இணையதள வசதிகளை கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சாமந்தமலை மற்றும் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பையனப்பள்ளி ஊராட்சி ஆகிய இடங்களில் உள்ள கிராம சேவை மையத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் இணையதள வசதிகளை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ் இன்று (02.10.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வட்டார சேவை மையத்தில் வட்டார அளவில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் இணையதள சேவை வசதியான வட்டார இருப்பு முனை (Block POP) ஆய்வு செய்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ் அவர்களை பழங்கள் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் இணையதள வசதிகளின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் (Tanfinet) சாந்தி, களப்பொறியாளர் வெங்கடேஷ், மாவட்ட மேலாளர் பாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.