கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 1800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 1800 மையங்களில் கொரோனா தடுப்பூசி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-11 03:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் தழுவிய மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1800 மையங்களில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 2-வது தவணை செலுத்த வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News