வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
வெளிமாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 72 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஊத்தங்கரை வழியாக குட்கா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் தலைமையில் கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை ரோட்டில் பிடிஓ அலுவலகம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ரூ.72,000/- மதிப்புள்ள 72 கிலோ புகையிலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, புகையிலை பொருட்களுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.