கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-12-14 13:56 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை வழிவகுக்கிறது

மத்திய அரசின் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற சேவையை வழங்குகிறது. கிருஷ்ணகிரியில் கடந்த 07.12.23 அன்று தொடங்கிய இந்தப் பயணம் ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கி, பல்வேறு அத்தியாவசிய சேவைகளை அளித்துள்ளது.

எரிவாயு முகவர்கள் மூலம் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் திட்டத்தின் கீழ் புதிய எரிவாயு இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம், ஆதார்-வங்கி கணக்கு இணைத்தல், மொபைல் எண் புதுப்பிப்புகள் மற்றும் முகவரி மாற்ற சேவைகளையும் உறுதி செய்கிறார்கள்.

இந்திய அஞ்சல் துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரங்குகளை அமைத்து, பல்வேறு நிதி சேவைகளை வழங்குகின்றன. மேலும், 15-29 வயதுடைய நபர்களின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்ட நமது இளைய பாரதம் திட்டத்தில் பதிவு செய்ய கிராம இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நேரு யுவகேந்திரா சங்கத்தின் அதிகாரிகள் கிராமப்புற இளைஞர்கள் மை பாரத் இணையதளத்தில் சேர உதவுவார்கள். வேளாண் கடன் அட்டை, மண்வள அட்டை போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு பதிவு செய்ய விவசாயிகள் இந்த பயணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மையம் சார்பில், இயற்கை விவசாயம் மற்றும் மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. துல்லிய வேளாண்மைக்கான ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து, மெட்ராஸ் உரத்தொழிற்சாலை நிறுவனம் சார்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஓசூர், கெலமங்கலம் வட்டாரங்களில் அடுத்துவரும் நாட்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை நடைபெறும் அட்டவணை பின்வருமாறு:

13.12.23: பெல்லம்பள்ளி, பச்சிகானப்பள்ளி ஊராட்சி (கிருஷ்ணகிரி ஒன்றியம்), மருதேரி, நெடுங்கல் ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), கோபனப்பள்ளி, அலசப்பள்ளி பட்வாரப்பள்ளி ஊராட்சி (ஓசூர் ஒன்றியம்)

14.12.23: மொரமடுகு, சொக்கடி ஊராட்சி (கிருஷ்ணகிரி ஒன்றியம்), பென்னேஸ்வரமடம், தாத்திரஹள்ளி ஊராட்சி (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), ஈச்சங்கூர், சேவகனப்பள்ளி ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

15.12.23: வேலகலஹள்ளி, சிக்கபூவதி, ஊராட்சிகள் (கிருஷ்ணகிரி ஒன்றியம்), மாரிசெட்டிஹள்ளி, மலையண்டஹள்ளி ஊராட்சி (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), படுதேப்பள்ளி, பலிகானப்பள்ளி ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

16.12.23: வெங்கடாபுரம், கொண்டேபள்ளி ஊராட்சிகள் (கிருஷ்ணகிரி ஒன்றியம்), திம்மாபுரம், சுண்டகுப்பம் ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), தும்மனப்பள்ளி, பழவனப்பள்ளி ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

17.12.23: செஞ்சுப்பள்ளி, திப்பனப்பள்ளி ஊராட்சிகள் (கிருஷ்ணகிரி ஒன்றியம்)

18.12.23: பையனப்பள்ளி, பெத்தனப்பள்ளி ஊராட்சிகள் (கிருஷ்ணகிரி ஒன்றியம்), மிட்டஹள்ளி, குண்டலப்பட்டி ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), முகலூர், கெலவரப்பள்ளி ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

19.12.2023: பெரியமுத்தூர், தேவசமுத்திரம் ஊராட்சிகள் (கிருஷ்ணகிரி ஒன்றியம்), கல்வேஹள்ளி, பன்னிஹள்ளி ஊராட்சிகள் (காவேரிப்பட்டினம் ஒன்றியம்), மாசிநாயக்கனப்பள்ளி, கொளதாசபுரம் ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

20.12.2023: கூலியம் (கிருஷ்ணகிரி ஒன்றியம்), வரதனப்பள்ளி ஊராட்சி (பர்கூர் ஒன்றியம்), ஜெகதாப், கரடிஹள்ளி ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), முதலி, கொத்தகிண்டப்பள்ளி ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

21.12.2023: சின்னமட்டரப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி ஊராட்சிகள் (பர்கூர் ஒன்றியம்), கோட்டப்பட்டி, செல்லகுடப்பட்டி ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), நந்திமங்கலம், ஒன்னல்வாடி ஊராட்சிகள் (ஓசூர் ஒன்றியம்)

22.12.2023: பாலேப்பள்ளி, கந்திகுப்பம் ஊராட்சிகள் (பர்கூர் ஒன்றியம்), சபர்த்தி, சாந்தபுரம் ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி ஊராட்சிகள் (கெலமங்கலம் ஒன்றியம்)

23.12.2023: ஒரப்பம், பலிநாயனப்பள்ளி ஊராட்சிகள் (பர்கூர் ஒன்றியம்), குடிமேனஹள்ளி, சவுடஹள்ளி ஊராட்சிகள் (காவேரிப்பட்டணம் ஒன்றியம்), போடிச்சிப்பள்ளி, ஜெக்கேரி ஊராட்சிகள் (கெலமங்கலம் ஒன்றியம்)

Tags:    

Similar News