முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் , உதவி திட்ட அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
இதில், 12 முதல் 14 வயது, 15 முதல் 17 வயது 18 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில், கை கால் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிவுத்திறன், மனவளர்ச்சி குறைபாடு, கண்பார்வையற்ற வர்களுக்கு, 50, 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து, மென் பந்து எறிதல் ஆகிய எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், உதவி திட்ட அலுவலர் வடிவேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சர்தார், கணேசன், பள்ளி ஆய்வாளர் சுதாகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால், உடற்கல்வி இயக்குனர் மாதையன் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாற்றத்தி றனாளிகள் வரும் 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.