பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி வழங்கல்

கிருஷ்ணகிரி பட்டாசு கடை வெடி விபத்பட்டாசு விற்பனை கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி வழங்கினார்.தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் நிதியுதவி வழங்கல்

Update: 2023-07-30 02:35 GMT

பட்டாசுக்கடை விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, நேதாஜி ரோடு, போகனப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு சில்லரை விற்பனை கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்து மருத்துவச்சிகிச்சை பெற்று வருபவர்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தே.மதியழகன் (பர்கூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் உடன் இருந்தனர். 

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி நகராட்சி, பழையபேட்டை, நேதாஜி ரோடு, போகனப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு சில்லரை விற்பனை கடையில் இன்று (29.07.2023) காலை எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 12 நபர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளது.

இந்த துயரச் செய்தியினை அறிந்த தமிழக முதல்வர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த ஆணையிட்டுள்ளார். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ரூ.1 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, இவ்விபத்தில் உயிரிழந்த  ரவி,  ரித்திகா, ருத்தீஷ்,  இம்ரான், இப்ராஹீம் கலீலுல்லா, ராஜேஸ்வரி, சிவராஜ் ஆகிய 7 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சேலம், தருமபுரி மாவட்டத்திலிருந்து கூடுதலாக மருத்துவர்களைக் கொண்டு சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்த காரணங்களை தருமபுரி தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதற்கான விவரம் பிறகு தெரிவிக்கப்படும் என  அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்  செ.ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்  பூவதி, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், கிருஷ்ணகிரி வட்டாட்சியர்  சம்பத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சுகவனம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  செங்குட்டுவன்,  முருகன், நரசிம்மன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News