கிருஷ்ணகிரியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை: ஒருவர் கைது
கிருஷ்ணகிரியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை சாலையில் ஐகுந்தம் கூட்ரோடு அருகே உள்ள எதிரியின் பெட்டிக் கடையின் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் பெட்டிக்கடையை சோதனை செய்ததில் கஞ்சா விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றி காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.