ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் உட்பட 7 பேர் சாலை விபத்தில் பலியான பரிதாபம்

பெங்களூர் கோரமங்களா என்ற இடத்தில் இரவு ஒன்றரை மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று பெண்கள் உள்பட,7 பேர் உயிரிழப்பு.

Update: 2021-08-31 04:01 GMT

எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் அவரது மகன் கருணா சாகர் (24) 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாசின் மகன் கருணா சாகர் (24) சென்ற ஆடி கார் விபத்து ஏற்பட்டத்தில் கருணா சாகர் உட்பட 7 பேர் பலியாகினர்.

பெங்களூர் அருகே கோரமங்கலா என்ற இடத்தில், இரவு ஒன்றரை மணிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பன ஆடி காரில் அதிவேகமாக சென்றதால்,

கருணா சாகர் (24) 

இவர்கள் கட்டுபாட்டை இழந்த கார் நடைபாதையின் மீது ஏறியது. அங்குள்ள சென்டர் மீடியனில் இடித்து சாலையோர கட்டடத்தில் வேகமாக மோதியது. காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் ஏர் பேக் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது.

நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட,7 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆடுகோடி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் எம்.எல்.ஏ பிரகாஷின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தற்போது கார் விபத்தில் தனது ஒரே மகனையும் இழந்து உள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News