ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவையொட்டி ரூ.60 லட்சத்தில் சாலைகள்
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவையொட்டி ரூ.60 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர் அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழாவையொட்டி, தேர்பேட்டையில் உள்ள சாலைகளை புதிதாக அமைக்கும் பணி ரூ.60 லட்சம் மதிப்பில் ஓசூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பணியை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தையா, தலைமை செயற்குழு உறுப்பினர் தா.சுகுமாரன், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், மாநகர பொறியாளர் ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் என். எஸ். மாதேஸ்வரன், எம்.நாகராஜ், கிருஷ்ணவேணி ராஜீ உள்ளிட்டோரும் கழக நிர்வாகிகள் மாநகர அவைத்தலைவர் கருணாநிதி, மாநகர துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், இளைஞரணி ராமு, இலக்கிய அணி சக்திவேல், வார்டு செயலாளர் நாகராஜ், மகேஷ் பாபு, சௌந்தர்யா முரளி,முருகன் மற்றும் பாலச்சந்தர், ஆதி, மணி, கார்த்திக் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.