சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் சிப்காட் பேஸ்-2 துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
அதன்படி, சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோர்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் காலேஜ், கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுன்டட்டி, அன்கேபள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.