ஓசூர் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி: அமைச்சர்கள் பங்கேற்பு

ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளியில், புதிய பேருந்து நிலையத்திற்கான அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சக்கரபாணி தொடங்கி வைத்தனர்

Update: 2023-10-22 15:39 GMT

ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளியில், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, டாக்டர் செல்லகுமார் எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர்), ராமச்சந்திரன் (தளி), ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வர வேற்றார்.

பின்னர், நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.550 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஓசூர், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாநகராட்சியாகும். இங்கு தற்போதைய மக்கள்தொகை 4 லட்சம்.

தொழில் மாநகரம் என்பதால் இந்த மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு துயரத்தை கொடுப்பதை கருத்தில் கொண்டு , தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மோரனப்பள்ளியில் உள்கட்ட மைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டம் 2023-24 -ன் கீழ், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள், முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் நிதியிலிருந்து ரூ.15 கோடியும், மாநகராட்சி பங்கு தொகை ரூ.10 கோடியும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 46 லட்சமும், பேருந்து நிலைய கடைகள் முன் ஏலத்தொகை ரூ.3 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாக துறை சார்பாக, ஓசூர் மாநகராட்சி, எம்.ஜி.ஆர் வணிக வளாகத்தில் மூலதன மானிய நிதி திட்டம் 2023-24 -ன் கீழ், ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது.

தொடர்ந்து, ஓசூர் காமராஜ் காலனி பகுதியில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இக்கட்டி டத்தில், வரவேற்பு அறை, அலுவலக அறை, கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு அறை, 1 ஆண்கள் கழிப்பறை, 1 பெண்கள் கழிப்பறை, ஒரே நேரத்தில் 80 நபர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு படிக்கும் வளாகம், 10 ஆயிரம் புத்தகங்கள் அடுக்கி வைக்கும் அளவிற்கு நூலக அலமா ரிகள், ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.

அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில், ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப் பட்டது.

ஓசூர் மாநகராட்சியில், 4 மண்டல அலுவலகங்கள் கட்டுமான பணிகளுக்கு ரூ. 12 கோடியும், மண்சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ.21 கோடியும். பழுதடைந்த தார் சாலைகளை புனரமைக்க ரூ. 22 கோடியும், மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க ரூ. 45 கோடியும் ஓதுக்கீடு செய்ய மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார் முன்னதாக, மாநகராட்சியில் தொடங்கவுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் விநியோக திட்ட பணிகள், அடிப்படை வசதி கள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 15 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளுக்கான காசோலைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளார் சண்முகநாதன், மேற்பார்வை பொறியாளர் ஜெயகுமார், நிர்வாக பொறியாளர்கள் லோகநாதன், சேகர், துணை மேயர் ஆனந்தைய்யா, முன் னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், மண்டல தலைவர் ரவி, மாநகராட்சி பொது சுகாதா ரக்குழு தலைவர் மாதேஸ்வ ரன், மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பேரண்டபள்ளி ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News