உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கி வைப்பு

ஓசூரில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை மேயர் துவக்கி வைத்தார்.;

Update: 2022-03-24 07:34 GMT

ஓசூரில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்த மேயர் சத்யா.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் இன்று ஓசூர் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கமும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர மேயர் சத்யா கலந்துகொண்டு காசநோய் உறுதிமொழி ஏற்றும், கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டும், காசநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்தும் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் ஆனந்தையா, மாமன்ற உறுப்பினர் ரவி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News