கோட்டை உளிமங்கலத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.;

Update: 2021-11-01 03:34 GMT

கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைக்கும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தளி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான சீனிவாசலு ரெட்டி, கெலமங்கலம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணேசன், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சிரிதர், ஒன்றிய குழு உறுப்பினர் சிவா, சக்திவேல், எல்லப்பன், ரவீந்திரன், பெரியசாமி, மோகன், நஞ்சப்பன், சிரிதர், ஊராட்சி மன்ற தலைவர், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News