ஓசூரில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் சுமார் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இன்று காலை துப்பாக்கி முனையில் 5 கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் சீனிவாச ராகவ் மாருதி பிரசாத் உள்ளிட்ட அங்கு வேலை செய்தவர்களை தாக்கி கட்டி வைத்துவிட்டு, சுமார் 25 கிலோ தங்கம், ரூ.96 ஆயிரம் பணம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.இதன் மதிப்பு ரூ. ஏழரை கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசூர் நகர காவல் துறையினர் பைனான்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.