கிருஷ்ணகிரியில் ரூ.27 ஆயிரம் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தவர் கைது

கிருஷ்ணகிரியில் வெளிமாநிலத்திலிருந்து ரூ.27 ஆயிரம் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-17 03:58 GMT

போலீசார் வெளியிட்டுள்ள படம்.

கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வகையில் சாக்குப்பையில் பண்டல் செய்யப்பட்ட இரண்டு மூட்டைகளை வைத்திருந்த நபரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹27,090/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது.

இதனையடுது்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவரை கைது செய்து, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் வழக்கு பதிந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News