புராண கால புகழ்பெற்ற கவுரம்மாதேவி தேர்திருவிழா
தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே கும்மளாபுரம் கிராமத்தில் கவுரம்மா கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள கும்மளாபுரம் கிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் அருகில் உள்ள கவுரம்மா தேவி கோவில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டு ஆண்டு காலமாக நவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் மற்றும் கவுரம்மாதேவி தேர் திருவிழாயைட்டி கடந்த வினாயகர் சதுர்த்தி நாளில் கோவில் திறக்கப்பட்டு நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன. தேர் திருவிழாவையொட்டி நவராத்திரி முதல் நாளில் சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவில் விநாயகர் மற்றும் கவுரம்மா தேவிக்கு தனிதனியாக தேர் அமைந்து 120 பேர் தேரை சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊரில் முழுவதும் ஊர்வலம் வந்தனர். பிறகு அருகில் கவுரம்மா ஏரியில் முதலில் விநாயகரையும் பிறகு கவுரம்மா சிலைகளை தண்ணீரில் கரைத்தனர். இந்த ஊரில் தவிர வேறு எங்கும் கவுரம்மா கோவில் இல்லை
முன்னதாக இங்கு விசேஷ பூஜைகளும் 101 கிணற்றில் தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேசம் செய்தனர்.
இந்த கிராமத்துக்கு புராண காலத்திலிருந்து புகழ் உண்டு. இந்த கிராமத்தில் 101 ஏரிகள், 101 குளங்கள் 101 கோயில்கள், 101 வில்வமரம், உள்ள இடம் என்று புராணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கவுரம்மா தேவின் உருவத்தை களிமண்ணால் சிறப்பு அலங்காரம் செய்து தங்கத்தாலி அணிவித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் தேவியின் களிமண் சிலையை மூழ்கடித்து 3 நாள் கழித்து அம்மன் தேவி சிலை கழுத்தில் இருந்த தங்கத்தாலி ஏரியில் மேலே மிதக்கும். இந்த தாலியை எடுத்து அம்மன் சன்னிதானத்தில் வைத்து கோவிலை பூட்டிவிடுவது வழக்கமாகும்.
இத்திருவிழாவில் மடாதிபதிகள், சுற்றுபுற பல கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு கர்நாடக ஆந்திர மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மீண்டும் கோவில் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது